இலவச விளம்பரம்


பொது நலன் சார்ந்த இலவச விளம்பரம் இது. உங்கள் விளம்பரங்களைச் சேர்க்க tamilblogawards.intl@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழ்ப் பதிவுலக நண்பர் சிங்கை நாதனின் இதயம் தொடர்ந்து துடிக்க உதவுங்களேன்.

மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

மதியம் சனி, ஆகஸ்ட் 1, 2009

2009 ஆகஸ்ட் விருதுகளுக்கான பரிந்துரைகள்

வணக்கம்!!!

2009 ஆகஸ்ட் மாத விருதுகளுக்கான பரிந்துரைகள் தினந்தினம் அதிகளவில் எமக்குக் கிடைத்த வண்ணம் உள்ளன. தினந்தினம் அதிகமான வலைப்பதிவுகள் பரிந்துரைக்கப்படுவதால் எங்கள் பரிசீலனைக்குழு கொஞ்சம் வேலைச்சுமையை எதிர் கொண்டாலும் அனைவரும் மகிழ்வுடன் அதனை ஏற்றுச் செய்கிறார்கள். அனேகமாக ஒவ்வொரு வலைப்பதிவும் ஏதோ ஒரு வகையில் சிறப்பானதாகவே இருக்கிறது இது விருதுகளுக்கான தெரிவை மிகக் கடினமானதாக ஆக்கியிருப்பதுடன் மிகச் சரியானதைத் தெரிய வேண்டிய கடப்பாட்டுக்கும் எம்மை ஆளாக்கியுள்ளது.

வலைப்பதிவர் ஒருவர் எமக்கனுப்பிய மடலில் வேறுபட்ட பாணியிலான வலைப்பதிவுகளுக்கும் அவற்றில் சிறந்தவற்றுக்கு விருது வழங்கலாம் - அதாவது கவிதை வலைப்பதிவுகள், ஹைக்கூப் பதிவுகள், புகைப்படப் பதிவுகள், வீடியோப் பதிவுகள் என வேறுபட்ட பாணியிலான பதிவுகளுக்கு விருது வழங்கலாம் என்றும் அதன் மூலம் வேறுபட்ட வாயிலான வலைப்பதிவுகளை தமிழில் ஊக்கிவிக்கமுடியும் எனவும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். இது பற்றி எமது குழு பரிசீலிப்பதுடன் ஏனையவர்களின் கருத்துக்களையுஞம் எதிர்பார்க்கிறது.

சிறந்த திரட்டி எது என்ற வாக்கெடுப்பு இன்னும் 3 நாட்களில் நிறைவுறுகிறது அதற்கான விருதும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இவ்வாக்கெடுப்பு தொடர்பில் கருத்தை எமக்கனுப்பிய ஒருவர் தமிழிஷ் திரட்டி அல்ல அது புக்மார்க் தளம் எனக் கூறியிருந்தார் - எனினும் நாம் “திரட்டி” என்பதன் கீழ் புக்மார்க் தளங்களையும் இணைத்து இந்த விருதினை வழங்க முடிவெடுத்தோம்.

இந்த முயற்சிக்கு உதவும், ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகள்!!

- எச்.கார்த்திகேயன்
தலைமை நிர்வாகி
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்.

0 comments: