இலவச விளம்பரம்


பொது நலன் சார்ந்த இலவச விளம்பரம் இது. உங்கள் விளம்பரங்களைச் சேர்க்க tamilblogawards.intl@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழ்ப் பதிவுலக நண்பர் சிங்கை நாதனின் இதயம் தொடர்ந்து துடிக்க உதவுங்களேன்.

மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

ஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...

வணக்கம்!

சில வாரங்களாக தொடர்ந்து பல பரிந்துரைக்கப்பட்ட பதிவுகளையும், நாமும் தேடித் தேடிப் பார்த்த பதிவுகளிலிருந்தும் விருதுகளுக்கான இறுதிக்கட்ட தெரிவுகள் நடைபெற்றாச்சு, ஆனாலும் 2 பிரிவுகளின் கீழ் இன்னும் தீர்க்கமான முடிவை விருதுக்குழு தீர்மானிக்கவில்லை, அடுத்து வரும் நாட்களில் அதுவும் இறுதிசெய்யப்பட்டுவிடும். இதுவரை ஆராய்ந்த தளங்களுள் புதிய பதிவர் மற்றும் பொழுதுபோக்குப் பதிவர் ஆகிய பிரிவுகளுக்கே அதிகளவு தெரிவுகள் காணப்பட்டன, மேலும் சிறந்த பதிவுக்கான பிரிவும் மிகவும் சவாலான ஒன்றாகவே காணப்படுகிறது. குழுத்தெரிவுகள் இவ்வாறிருக்க நீங்கள் வாக்குகள் மூலம் தீர்மானிக்கும் பிரபல பதிவுக்கான விருதுக்கான வாக்குகளும் மிகுந்து போட்டியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக லோஷனின் களமும், யுவகிருஷ்ணாவும் நெருங்கிய போட்டியில் காணப்படுகிறது. வாக்குகள் பதிவது ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகிறது ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஆகஸ்ட் 2009ற்கான சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள் வழங்கப்படும்.

எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்கின்றோம்.

விருதுக்குழு சார்பில்,

- வேதாந்தி
விருதுக்குழுப் பொறுப்பாளர்
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்

சிறந்த திரட்டி விருதுக்கான வாக்கெடுப்பு முடிவு

எங்கள் சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள் தளத்தில் “சிறந்த திரட்டி” விருதுக்கான வாக்கெடுப்பு வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருக்கிறது. அதாவது கொடுக்கப்பட்ட தெரிவுகள் பெற்ற வாக்குகளை விட் ஏனையவை என்ற தெரிவு அதிக வாக்குகள் பெற்றதன் பேரில் இவ்விருதுக்கான வாக்கெடுப்பு வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருக்கிறது. எனினும் வாக்கெடுப்பின் அடிப்படையில் முதலாம் இடத்தை - “ஏனையவை” என்ற தெரிவும், இரண்டாம் இடத்தை - “தமிழிஷ்” தளமும், மூன்றாம் இடத்தை “தமிழ்மணம்” தளமும் பெற்றிருக்கிறது.

- எச்.கார்த்திகேயன்
தலைமை நிர்வாகி
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்.

2009 ஆகஸ்ட் விருதுகளுக்கான பரிந்துரைகள்

வணக்கம்!!!

2009 ஆகஸ்ட் மாத விருதுகளுக்கான பரிந்துரைகள் தினந்தினம் அதிகளவில் எமக்குக் கிடைத்த வண்ணம் உள்ளன. தினந்தினம் அதிகமான வலைப்பதிவுகள் பரிந்துரைக்கப்படுவதால் எங்கள் பரிசீலனைக்குழு கொஞ்சம் வேலைச்சுமையை எதிர் கொண்டாலும் அனைவரும் மகிழ்வுடன் அதனை ஏற்றுச் செய்கிறார்கள். அனேகமாக ஒவ்வொரு வலைப்பதிவும் ஏதோ ஒரு வகையில் சிறப்பானதாகவே இருக்கிறது இது விருதுகளுக்கான தெரிவை மிகக் கடினமானதாக ஆக்கியிருப்பதுடன் மிகச் சரியானதைத் தெரிய வேண்டிய கடப்பாட்டுக்கும் எம்மை ஆளாக்கியுள்ளது.

வலைப்பதிவர் ஒருவர் எமக்கனுப்பிய மடலில் வேறுபட்ட பாணியிலான வலைப்பதிவுகளுக்கும் அவற்றில் சிறந்தவற்றுக்கு விருது வழங்கலாம் - அதாவது கவிதை வலைப்பதிவுகள், ஹைக்கூப் பதிவுகள், புகைப்படப் பதிவுகள், வீடியோப் பதிவுகள் என வேறுபட்ட பாணியிலான பதிவுகளுக்கு விருது வழங்கலாம் என்றும் அதன் மூலம் வேறுபட்ட வாயிலான வலைப்பதிவுகளை தமிழில் ஊக்கிவிக்கமுடியும் எனவும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். இது பற்றி எமது குழு பரிசீலிப்பதுடன் ஏனையவர்களின் கருத்துக்களையுஞம் எதிர்பார்க்கிறது.

சிறந்த திரட்டி எது என்ற வாக்கெடுப்பு இன்னும் 3 நாட்களில் நிறைவுறுகிறது அதற்கான விருதும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இவ்வாக்கெடுப்பு தொடர்பில் கருத்தை எமக்கனுப்பிய ஒருவர் தமிழிஷ் திரட்டி அல்ல அது புக்மார்க் தளம் எனக் கூறியிருந்தார் - எனினும் நாம் “திரட்டி” என்பதன் கீழ் புக்மார்க் தளங்களையும் இணைத்து இந்த விருதினை வழங்க முடிவெடுத்தோம்.

இந்த முயற்சிக்கு உதவும், ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகள்!!

- எச்.கார்த்திகேயன்
தலைமை நிர்வாகி
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்.

விருதுகளுக்கான பரிந்துரைகள்

சர்வதேசத் தமிழ் வலைப்பதிவுகளுக்கான விருதுகளை மேலும் மேம்படுத்தும் முகமாக வாசகர்கள், பதிவர்கள் அனைவரிடமிருந்தும் விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற எமது குழு தீர்மானித்திருக்கிறது. அந்த வகையில் எமது வலைத்தளத்தில் விருதுகளுக்கு பரிந்துரைக்கும் விண்ணப்பபடிவமொன்றை இணைத்துள்ளோம், அதனூடாகத் தங்களது பரிந்துரைகளை எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்விருதுகள் தரமான, நியாயமான படைப்பாளிகளுக்குப் போய்ச்சேர வேண்டும் என்பதே எமது குறிக்கோள்.

- எச்.கார்த்திகேயன்
தலைமை நிர்வாகி
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்.

2009 ஆகஸ்ட் பிரபலமான தமிழ் வலைப்பதிவு விருதுக்கான வாக்கெடுப்பு

2009 ஆகஸ்ட் பிரபலமான தமிழ் வலைப்பதிவு விருதுக்கான வாக்கெடுப்பு தற்போது சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள் தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாக்கெடுப்பில் விருதுக்குழுவின் பரிசீலனையின் அடிப்படையில் 13 வலைப்பதிவுகள் வாக்கெடுப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அவை பெறும் வாக்குகளின் அடிப்படையில் மிகப்பிரபலமான தமிழ் வலைப்பதிவு தெரிவுசெய்யப்படும். நீங்களும் உங்களுக்கு மிகப்பிடித்த வலைப்பதிவிற்கு உங்கள் வாக்கினை அளித்து இப் பதிவர்களை ஊக்குவியுங்கள். வாக்களிப்பு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி நிறைவு பெறும் புதிய விருதுகள் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அறிவிக்கப்படும். இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களைப் பெறவும், கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களையும் tamilblogawards.intl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

- எச்.கார்த்திகேயன்
தலைமை நிர்வாகி
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்.

2009 ஜீலை மாதத்திற்கான விருதுகள்

சிறந்த தமிழ் வலைப்பதிவுக்கான “தாமரை” விருது



தீராத பக்கங்கள்
http://mathavaraj.blogspot.com/


சிறந்த தமிழ் பொழுதுபோக்கு வலைப்பதிவுக்கான “தாமரை” விருது


கேபிள் சங்கர்
http://cablesankar.blogspot.com/


சிறந்த தமிழ் தொழில்நுட்ப வலைப்பதிவுக்கான “தாமரை” விருது



தமிழ் 2000
http://tamizh2000.blogspot.com/


சிறந்த தமிழ் சமூக வலைப்பதிவுக்கான “தாமரை” விருது


இட்லி வடை
http://www.idlyvadai.blogspot.com/


சிறந்த புதிய பதிவருக்கான “அறிஞர். அண்ணா” விருது


இதயம் பேத்துகிறது
http://kgjawarlal.wordpress.com/

பிரபலமான தமிழ் வலைப்பதிவுக்கான விருது 2009 ஜீலை மாதத்திற்கு வழங்கப்படவில்லை, அடுத்த மாதம் முதல் வாக்கெடுப்பின் மூலம் இவ்விருது வழங்கப்படும்.

வணக்கம்!

சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் தமிழ் இணைய உலகில் இன்று பலமான இடத்தை வலைப்பதிவுகள் பெற்றிருக்கின்றன, அத்தகைய வலைப்பதிவுகளில் சிறந்தவற்ற அடையாளங் கண்டு பாராட்டுவதுடன் ஏனைய வலைப்பதிவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு நாம் விருதுகள் வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். இவ்விருதுகள் ஒருவர் இன்னொருவருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் சங்கிலித் தொடர் விருதுகளல்ல மாறாக பலவகைகளில் சிறந்த வலைப்பதிவுகளுக்கு வழங்கப்படும் சரியான அங்கீகாரம். ஒவ்வொரு மாதத்தினதும் மிகப்பிரபலமான வலைப்பதிவுக்கான விருது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் வழங்கப்படும். இது போக மாதா மாதம் பின்வரும் விருதுகளை வழங்கத் திட்மிட்டிருக்கின்றோம்.

- சிறந்த தமிழ் வலைப்பதிவுக்கான “தாமரை” விருது
- சிறந்த தமிழ் தொழில்நுட்ப வலைப்பதிவுக்கான “தாமரை” விருது
- சிறந்த தமிழ் பொழுதுபோக்கு வலைப்பதிவுக்கான “தாமரை” விருது
- சிறந்த சமூக வலைப்பதிவுக்கான “தாமரை” விருது
- சிறந்த புதிய பதிவருக்கான “அறிஞர். அண்ணா” விருது

மேற்படி விருதுகளுக்கான பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். தங்களது பரிந்துரைகளை tamilblogawards.intl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

- எச்.கார்த்திகேயன்
தலைமை நிர்வாகி
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்.